நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசருடன் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி ,சஞ்சனா நடராஜன், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Suruli is here. Watch the #JagameThandhiramTeaser Now !https://t.co/goyUHOfW72#JagameThandhiramOnNetflix @netflixindia@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn@Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil
— Y Not Studios (@StudiosYNot) February 22, 2021
சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது . இருப்பினும் இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை . இந்நிலையில் இன்று ஜகமே தந்திரம் படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. அதில் ஜகமே தந்திரம் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது . விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் . இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் .