10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும் திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பதிலளித்த முக ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அழைக்க சொல்லவில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட IJK , மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை என்றும் அரசுக்கு ஆதரவான கட்சிகள் மட்டும் அழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.மேலும் முதலமைச்சர் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.