Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் பாஜக” காங்கிரஸ் MLA குற்றசாட்டு…!!

சுயேச்சை MLA  நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பாட்டு வருகின்றது.எப்போது வேண்டுமெனாலும் ஆட்சி கவிழும் சூழலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.அங்குள்ள கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றவர் நாகேஷ். இவரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் காங்கிரஸ் கட்சியின் சிவகுமார்.

Image result for dk shivakumar

சிவகுமார் கர்நாடக அரசில் அமைச்சராக இருந்ததால் சுயேச்சை வேட்பாளர்  நாகேஷ்_ஷை அரசுக்கு ஆதரவு அளிக்க வைத்து அமைச்சராக்கி விட்டார்.தற்போது கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் சூழலில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த  சுயேச்சை MLA  நாகேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று விட்டு தனது ஆதரவை பிஜேபி_க்கு தெரிவித்து கடிதம் கொடுத்தார்.

Image result for dk shivakumar

இது காங்கிரஸ் கட்சியின் சிவகுமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்து எப்படியாவது  நாகேஷ் MLA_விடம் பேசி சமாதான படுத்த வேண்டுமென்று நாகேஷ்_ஷை சந்திக்க முயற்சிக்கையில் அவர் மும்பைக்கு சென்று விட்டார். கர்நாடக மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்ட போதெல்லாம்  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசையும் காப்பாற்றியவர் சிவக்குமார். அரசை காப்பாற்ற தற்போதும் தனது தொடர் முயற்சியில் இறங்கியுள்ள சிவக்குமார் தற்போது சுயேச்சை MLA_வை பறிகொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக தெரிவித்து வருகின்றார்.

Categories

Tech |