பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற திட்டம் விரிவுபடுத்தவிருக்கிறது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது .இதில் முதலில் வயதானவர்கள் ,கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள் மருத்துவ பணியாளர்கள் போன்றவர்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிலையில் ,தற்போது ஜூலை 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசிகளை பெரியவர்களுக்கு போடப்பட வேண்டும் என்ற திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது. இதைத்தொடர்ந்து 50 வயது மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த புதிய இலக்கு போடப்பட்டுள்ளது.
மே 1 தேதி வரை இதற்கு முன் இந்த இலக்கு இருந்தது .மேலும் ஆஸ்ட்ரோஜெனேகா, பைசர் நிறுவனங்களின் தடுப்பூசிகளை பிரிட்டன் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதற்கு பற்றாக்குறை உள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.