மூன்று வருடத்திற்க்குள் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 51 குழந்தைகள், மதுரை மாவட்டம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக மதுரை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இக்குழு காவல்துறையினருடன் இணைந்து பெண் சிசு கொலையை தடுப்பது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும் மதுரையில் பெண் சிசுக்கொலை ஆங்காங்கே தொடர்வது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கடந்த 2018-19-ம் இரண்டு ஆண்டிற்குள் 18 பெண் குழந்தைகளும், 6 ஆண் குழந்தைகளும் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா என்பவர் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சைல்டு லைன், குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற அமைப்புகள் உள்ளனர். இதேபோல் பல்வேறு விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து 2020-ம் ஆண்டில் 27 குழந்தைகள்,மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று ஆண்டிற்குள் 51 குழந்தைகள், குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பாண்டியராஜா கூறியுள்ளார்.