Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்தபோது…. 3 பேர் பலி,3 பேர் படுகாயம்…. பரிதாப சம்பவம்…!!

பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எஸ்.பட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று காலை 10க்கும் அதிகமானோர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அரூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சாலையோரம் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அரூரைச் சேர்ந்த வெண்மதி (வயது 42), அழகம்மாள் (வயது 22) மற்றும் கருத்தம்பட்டி சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் ஸ்ரீநாத் (வயது 16) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று விபத்தில் இறந்த 3 பேரின் சடலத்தையும் மீட்டு உடற்குறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |