மதுரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக குழந்தைகள் நலக்குழுவின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெண் சிசுக்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட குழந்தைகள் நலதுறையினரும், காவல் அதிகாரிகளும் இணைந்து பெண் சிசுக் கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினரான பாண்டியராஜா கூறியதாவது இந்த அமைப்பின் மூலம் 2018ஆம் ஆண்டு 7 பெண் குழந்தைகள் மற்றும் 2019 ஆம் ஆண்டு 11 பெண் குழந்தைகள் உட்பட 6 ஆண் குழந்தைகளும் மொத்தமாக 17 குழந்தைகளும் குழந்தை நல குழுவின் உதவியினால் காப்பாற்றப்பட்டனர்.
இந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் 27 குழந்தைகள் குழந்தைகள் நல குழுவினர் உள்ள பல இடங்களில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது.இதுபோன்று பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகள் மட்டும் 56 குழந்தைகள், நலகுழுவின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.