அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர் தற்போது ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ப்ரீட்ரிக் பெர்கர் என்ற 90 வயது முதியவர் ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் கடந்த 1945ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக பணியாற்றி உள்ளார். அந்த சித்ரவதை முகாமில் 40 ஆயிரம் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து ப்ரீட்ரிக் பெர்கர் தெரிவித்ததாவது, தான் சித்திரவதை முகாமில் வேலை செய்தது உண்மைதான். ஆனால் யுத்தம் முடியும் காலகட்டத்தில் மட்டுமே நான் அங்கு காவலராக வேலை செய்தேன். நான் வேலை செய்த நேரத்தில் யாரும் கொலை செய்யப்படவில்லை.அதுமட்டுமின்றி தான் அங்கு வேலை செய்ய உத்தரவிடப்பட்டேன் என்று தெரிவித்தார்.
ஆகையால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வெளியேற்றுவது தன் வீட்டில் இருந்து வெளியேற்றுவது போல இருக்கிறது. மேலும் இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்றும் கூறியுள்ளார்.ஜெர்மனியின் கோரிக்கையின் பேரில் அமெரிக்காவிலிருந்து ப்ரீட்ரிக் பெர்கர் ஜெர்மனுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.