Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் அம்மா செண்டிமெண்ட்…! ஒர்க் அவுட் ஆகுமா ? புது ரூட்டில் எடப்பாடி …!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு தயாராக உள்ள அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. குறிப்பாக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பல்வேறு உத்திகளையும், யூகங்களையும் கையாண்டு வருகிறது. அதே போல தொடர்ச்சியாக மூன்றாவது முறை  ஆட்சி கட்டிலை அலங்கரிக்க வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களையும், அதிரடி அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகின்றது.

திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி பல்வேறு விதமான விஷயங்களை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே தான் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தமிழகம் திரும்பினார். இவர் வந்தது முதல் அதிமுகவில் பூகம்பங்கள் வெடிக்கும், அதிமுகவில் அதிக குழப்பங்கள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், பெரிய அளவில் எவ்வித தாக்கமும் இல்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில் சசிகலா மௌனமாக இருப்பது அதிமுகவிற்க்குள் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் தொடர்ந்து திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், ஒட்டுமொத்த அதிமுகவையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வியூகங்களை முதலமைச்சர் எடப்பாடி  எடுத்து வருகிறார். சசிகலா விவகாரத்தில் பெண்களின் வாக்கு அதிமுகவிற்கு கிடைக்காமல் போய்விடுமோ ? என்பதை கவனித்துள்ள அதிமுக தலைமை தமிழகம் முழுவதும் உள்ள பெண்களின் வாக்குகளை அம்மாவின் பெயரால் அதிமுகவுக்கு அறுவடை செய்ய திட்டமிட்டு வருகின்றது.

இந்த நிலையில் தான் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் வீட்டில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். அம்மாவை நினைத்து தீபம் ஏற்றி உறுதி எடுக்க வேண்டும் என்ற அதிமுக தலைமை அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தீபமேற்ற வேண்டும் என்பதால் குறிப்பாக வீடுகளில் பெண்களின் பங்கு நிச்சயமாக இருக்கும். எனவே ஜெயலலிதாவை சென்டிமென்டாக பயன்படுத்தி அனைத்து வீடுகளிலும் அதிமுக, ஜெயலலிதா,  இரட்டை இலை என்ற தேர்தல் கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

Categories

Tech |