சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி அமெரிக்காவிடம் சீனாவிற்கு மற்ற நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் .
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை விதித்திருந்தார். அந்த தடைகளை கைவிடுமாறு தற்போதைய அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஹாங்காங் ,தைவான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சீனாவின் பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் உரிமைகளை சீனா பாதுகாக்கும் என்றும் , சீனா பொருட்களின் மீதான நியாயமற்ற கட்டணங்களையும் அமெரிக்கா சீக்கிரம் சரி செய்யவேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் மற்றும் சீன நிறுவனங்கள் மீதான ஒருதலைப்பட்ச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அப்போது தான் சீனா கொரோனா தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார முயற்சி ஆகிய மூன்று பெரிய பிரச்சனைகளில் ஒத்துழைப்பாக இருக்கமுடியும் என்று வாங் யி கூறியுள்ளார்.