தமிழகத்தில் நடக்கவிருப்பதற்கான ஒத்திகை தான் புதுச்சேரியில் நடந்துள்ளது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஜகவின் நாகரிகமற்ற இந்த செயலை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தகுந்த பாடத்தை புதுச்சேரி மக்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறோம். தற்போது புதுச்சேரியில் நிகழும் சம்பவங்களை வைத்து அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் நடப்பதற்கான ஒத்திகை தான் புதுச்சேரியில் நடந்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.