Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண்…. வெள்ளத்தில் மூழ்கி மாயம்…. தீவிரப்படுத்தப்பட்டது தேடுதல் பணி….!!

ஸ்கூட்டரை மீட்கச் சென்ற இளம்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மீன் வியாபாரி. இவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹசீனா பேகம் தனது ஸ்கூட்டரை வீட்டு அருகில் உள்ள ஓடைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் நேற்று கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை ஹசீனா பேகத்தின் ஸ்கூட்டர் ஓடையில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளது.

இதனைக் கண்ட ஹசீனா பேகம் ஸ்கூட்டரை மீட்டெடுத்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெருக்கெடுத்த வெள்ள நீரால் ஹசீனா பேகம் ஓடையில் உள்ள நீரில் மூழ்கினார். ஹசீனா பேகம் தன்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டு உள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் இளம் பெண்ணை மீட்க போராடினர். ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |