ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக கட்சி தலைவர்கள் வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் 1100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,022கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதில் கால்நடை பண்ணை பிரிவு, கால்நடை உற்பத்தி பொருள்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன் பல பிரிவுகள் உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன. பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஐந்தாவது கால்நடை மருத்துவ கல்லூரி ஆகும். இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.