Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஸ்டண்ட்: அதுவும் பிரியாணியை வைத்து…. செல்லூர் ராஜுவின் நெகிழ்ச்சி செயல்…!!

அமைச்சர் செல்லூர் ராஜு மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள்  தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணியினர், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து கூட்டம் எடுத்த பிறகு அவர்களுக்கு இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லோரும் வரிசையாக நின்று பிரியாணியை பெற்று தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் திடீரென்று வந்து செல்லூர் ராஜு அவர்களோடு சமமாக வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அமைச்சரின் இந்த செயல் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |