Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாயுத்தொல்லை முழுமையாக நீக்கி… ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யணுமா ? இந்த ரெசிபியினால்… உடனடியாக எளிய தீர்வு..!!

 இஞ்சி பிரண்டை துவையல் செய்ய தேவையான பொருட்கள் :

 பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி                                      –  சிறிய துண்டு
புளி                                           – ஒரு நெல்லிக்காய் அளவு
உளுத்தம்பருப்பு                – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்               – 2
கறிவேப்பிலை                   – ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணெய்                – 2 டீஸ்பூன்,
உப்பு                                          – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பிரண்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதன் சுற்றுள்ள நார்களை நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு இஞ்சியை தோல் நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும்,  நறுக்கி வைத்த பிரண்டை, நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை,  ஒவ்வொன்றாக போட்டு தனித்தனியாக ஒன்றாக போட்டு நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்.

மேலும் அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் கூடுதலாக எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுத்து இறக்கி கொள்ளவும். பிறகு மிக்சிஜாரில் வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு மையாக அரைக்கவும்.

பின்னர் அரைத்த கலவையுடன் புளி, வதக்கி வைத்த கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு கெட்டியாகவும் மைபோல் அரைத்து எடுத்து தோசை அல்லது இட்லியுடன் பரிமாறினால், ருசியான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.

Categories

Tech |