Categories
உலக செய்திகள்

“அடுத்த சில மாதங்களுக்குள் இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்”… திட்டம் தீட்டிய போரிஸ் ஜான்சன்…!!

ஊரடங்கிலிருந்து பிரிட்டனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது தேசிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீக்குவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுவரும் நிலையில்  4 அம்ச திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வருகின்ற மார்ச் மாதம் முதல் பிரிட்டனில் அனைத்து பள்ளிகளும் திறப்பட்டடுவிடும் என்பது தெரியவந்துள்ளது. 2அல்லது 3 பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி விளையாட்டு மைதானங்கள்,  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறுதிக்குள்  ஹோட்டல்கள்,பப்கள் போன்றவை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஜூன் மாதத்திலிருந்து திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும்,  ஜூலை மாத இறுதிக்குள் பிரிட்டனில் வசிக்கும்  மூத்த குடிமக்கள் அனைவருக்கும்  நிச்சயம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |