இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து 45 நாட்களுக்கு பிறகு பணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் பல நிறுவனங்களும் buy now pay later என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ஐசிஐசிஐ வங்கி இணைந்துள்ளது. அவண்டி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது. இந்த சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் கடன் வரம்பிற்குள் செலவழித்து அதன் பிறகு 45 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தலாம். இந்த அதிரடி சேவை ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
இந்த சேவையை mobile ஆப், பாக்கெட்ஸ் ஆப் அல்லது இன்டர்நெட் பாங்கிங் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணக்கை நீங்கள் தொடங்கியவுடன் pl.mobilenumber@icici ஒரு upi ஐஐடி மற்றும் pay later கணக்கு எண்ணை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடன் சேவையை நெட்வொர்க்கிங் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்யலாம். அதன் மூலம் நீங்கள் ஸ்கேன் செய்து UPI QR குறியீட்டை மூலம் பணம் செலுத்தலாம். மிகப்பெரிய தொழில் நுட்பத்தின் மூலம் அமேசான், பேடிஎம் போன்ற பெரிய ஆன்லைன் வணிகர்களுக்கு நீங்கள் பணம் செலுத்த முடியும். அதனைப் போலவே சில சிறிய ஆன்லைன் வணிகர்களுக்கும் பணம் செலுத்தலாம்.