துபாயில் டேட்டிங் ஆப் மூலம் இளைஞரிடமிருந்து 55 லட்சம் சுருட்டிய பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் டேட்டிங் அப்ளிகேஷன் மூலமாக விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த விளம்பரத்தை பெண்கள் கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் பார்லர் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில் பாடி மசாஜ் செய்வதற்கு துபாய் மதிப்பில் 200 திர்ஹாம், இந்த மதிப்பானது இந்திய ரூபாயில் (3, 950) குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று போடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் ஆனது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவை சேர்ந்த 33 வயதான இளைஞர் இதைக்கண்டு அதில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்பெண்களை தொடர்பு கொண்டு பேசியபோது , அவர் துபாயில் உள்ள ஆல் ரிபா என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வருமாறு கூறியுள்ளனர். அந்த இளைஞர் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு 4 ஆப்பிரிக்காவை சேர்ந்த நைஜிரிய பெண்கள் இருந்துள்ளனர்.
அந்த நான்கு பெண்களும் இளைஞரை மடக்கிப்பிடித்து, அவர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை தங்கள் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யுமாறு மிரட்டியுள்ளனர். அங்கே இருந்த மற்றொரு பெண் அவருடைய வங்கி கிரெடிட் கார்டை எடுத்துக்கொண்டு அதிலிருந்து 30,000 திர்ஹாம் பணத்தை திருடி உள்ளார். இதன் மதிப்பானது இந்திய ரூபாயில் சுமார் 5 , 92 ,586 லட்சம் ஆகும். அந்த இளைஞரை அந்த இளம் பெண்கள் ஒரு நாள் முழுவதும் தங்கள் வீட்டிலேயே சிறைப்பிடித்து அடித்து, துன்புறுத்தி அடைத்துள்ளனர்.
பின் அவரின் மொபைல் வங்கி கணக்கின் மூலம் 2, 50 000 திர்ஹாம் பணத்தை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 49, 38, 219 ரூபாயை அவர்களின் பல்வேறு வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்துத்துள்ளனர் . சம்பவத்திற்குப் பின் பாதிக்கப்பட்ட இளைஞர் தன்னுடைய வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியை தொடர்பு கொண்டு அவர் கணக்கில் இருந்து முறைகேடாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து கூறினார்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த 3 மூன்று பெண்கள் ஷார்ஜாவில் கைதுசெய்யப்பட்டனர். நான்கு பெண்களில் மூவர் கைதான நிலையில் தலைமறைவான மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர் துபாயில் இந்திய இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.