Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களின் குறைகேட்டு…. 50 அடி உயரத்தில் ஏறிய அமைச்சர்…. பதற்றத்தில் அதிகாரிகள்….!!

மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அங்கு உள்ள கிராமத்திற்குச் சென்று 50 அடி உயரத்தில் ஏறிய நிகழ்வு அங்குள்ள மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது

மத்திய பிரதேசம் மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்திற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பரஜேந்திர சிங் அவர்கள் வந்திருந்தார்.அப்போது அங்குள்ள கிராம மக்களை சந்தித்தார் அவர்கள் தினமும் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை பற்றி கேட்டறிந்தார் முக்கிய பிரச்சினைகளை உடனே தீர்ப்பதாகவும் வாக்களித்த அமைச்சர் அதற்கு உண்டான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் எல்லா துறைகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள நினைக்கும் போது நெட்வொர்க் இல்லாத காரணத்தால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அங்கு இருந்த 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி அங்கிருந்து அவர் அனைத்து துறைகளுக்கும் தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டியுள்ளார்.

அமைச்சர் 50 அடி உயரத்தில் ஏறியது அங்கிருந்த அதிகாரிகளுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 4ஜி, 5 ஜி என தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கும் நிலையிலும் இன்னும் இதுபோன்ற சில கிராமங்களுக்கு மட்டும் இந்த மாதிரி சேவைகள் வந்து சேராமல் இருப்பது உண்மையில் மனதை வேதனைப் படுத்தும் விஷயமாக இருக்கிறது.

Categories

Tech |