சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் பணமில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் புலம்பி தள்ளி உள்ளார்.
கொரோனாவால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதேபோல் மற்றொரு பொது முடக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் இப்போது தனது கஜானாவை லேசாக திறந்துள்ளது. 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்துள்ளது.
இதை வழங்குவது குறித்து கூறிய நிதி அமைச்சர் யூலி மயூரேர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாடு கடன் வாங்க நேர்ந்துள்ளது என்று புலம்பித் தள்ளி உள்ளார். இன்னும் ஆறு மாதங்களில் கடனாக வாங்கிய 10 பில்லியன் ப்ராங்குகளை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பணக்கார நாடு என்று உலகமே போற்றி கூறும் சுவிட்சர்லாந்தில் அதன் நிறுவங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருப்பினும் மீண்டும் மீண்டும் அரசாங்கத்திடம் பணமில்லை என்று நிதியமைச்சர் கூறி வருகிறார்.