நடிகர் நெப்போலியன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது . நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் குஷ்பு , மீனா , நயன்தாரா , கீர்த்தி , சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரபல நடிகர் நெப்போலியன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .