பிரிட்டனில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிரிட்டனில் முதற்கட்டமாக முதியவர்களுக்கும், வைரசால் விரைவில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது பைசர் மற்றும் அஸ்ட்ராஜனகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. ஆனால் பிற நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.