சுமார் 11 மாதங்களுக்கு பிறகு குளிர்சாதன பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து ரயில்கள், பஸ்கள் போன்றவை இயங்க ஆரம்பித்துள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 11 மாதங்களாக இயங்காமல் இருந்த குளிர்சாதனப் வசதிகொண்ட பேருந்துகள் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் நேற்று குளிர்சாதன பஸ்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பழுது பார்க்கப்பட்டு பணிமனையில் இருந்து பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன பேருந்து காரைக்குடியில் இருந்து மதுரைக்கு, காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு தலா மூன்று முறை இயக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர்சாதன பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு குளிர்சாதன பேருந்து இயக்க பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்