Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எலும்பிற்கு வலு சேர்க்கும் தக்காளி பழத்தில்… அருமையான ருசியில்… ருசியான ரெசிபி செய்து அசத்துங்க..!!

தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள் :

தக்காளி                            – 2
வெங்காயம்                    – 1
எண்ணெய்                      – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை             – சிறிதளவு
கொத்தமல்லி தழை  – சிறிதளவு

அரைக்க:

தேங்காய்                       – 2 துண்டு
பெருஞ்சீரகம்               – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்          – 3
பூண்டு                              – 4 பல்
முந்திரி                            –10

தாளிக்க:

கடுகு                                 – அரை ஸ்பூன்
பெருஞ்சீரகம்               –  அரை ஸ்பூன்
மிளகு                               –  அரை ஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காய், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். மிக்சிஜாரில் நறுக்கிய தேங்காய், பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, முந்திரியை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் குக்கரை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,பெருஞ்சீரகம்,மிளகை போட்டு தாளித்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கியபின், அதில் நறுக்கிய  தக்காளியை போட்டு சிறிது வதக்கி கொள்ளவும்.

மேலும் தக்காளி நன்கு வதங்கியபின், அரைத்த மசாலா கலவையை  போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி  தேவைகேற்ப தண்ணீர் ஊற்றியபின்,  குக்கரை மூடி வைத்து நன்கு வேக வைத்து 3 விசில் வந்ததும்  இறக்கி வைத்து ஓரளவு கெட்டியானதும், நறுக்கிய கொத்தமல்லி தழையை  தூவி பரிமாறினால் ருசியான  தக்காளி குருமா ரெடி.

Categories

Tech |