Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்து சுவையில்… ரொம்ப சிம்பிளான முறையில்… சுவைக்க தூண்டும்… சுவையான ஒரு ஸ்னாக்ஸ்..!!

கடலை உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

வேர்கடலை – 2 கப்
வெல்லம்       – 1 கப்
தண்ணீர்         – 1/2 கப்
நெய்                 – சிறிது

செய்முறை:

முதலில் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து அதில் வேர்கடலையை போட்டு நன்கு  வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லம் போட்டு கரையும் வரை ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு போல் நன்கு கொதிக்க விடவும்.

மேலும் கொதிக்க விட்ட பாகுவில், வறுத்த வேர்கடலையை  போட்டுகரண்டியால் நன்கு கிளறிவிட்டு இறக்கி, ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி கொள்ளவும்.

இறுதியில் கையில் சிறிது நெய் தடவியபின், கொட்டிய கலவையானது சூடாக இருக்கும்போது, சிறுசிறு  உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால் ருசியான கடலை உருண்டை ரெடி.

Categories

Tech |