திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து மாசி திருவிழாவும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றுள்ளது.
இந்த பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் பூ தண்டுகளை ஏந்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு சாத்தி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் மாவிளக்கு எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். அதன்பின் யானை ஊர்வலத்துடன் செண்டை மேளம் முழங்க பூ தண்டுகளை காமராஜபுரம் தொகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சாட்டப்பட்டுள்ளது.