வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி ரேவதி இவருக்கு பரனேஷ் என்ற மகன் உள்ளான். இவர்கள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் முதல் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கதவை சாத்திவிட்டு தாழ்பாள் போடாமல் தூங்கியுள்ளனர்.
இதனை அறிந்த மர்ம நபர் நேற்று அதிகாலை வீட்டில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ரேவதியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். அதன்பின் திடீரென்று சத்தம் கேட்டதால் சண்முகசுந்தரம் விழித்து பார்த்தபோது மர்ம நபரை கண்டுள்ளார். அவர் மர்மநபரை பிடிப்பதற்குள் தப்பித்து சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.