நேற்று திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், அத்தி கடவு அவினாசி திட்டத்தை ஏதோ தங்களுடைய சாதனையை போல அதிமுக அரசு சொல்லிட்டு இருக்கு. இது இவங்களால தொடங்கப்பட்ட திட்டமல்ல. 1972ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களால், கொள்கைரீதியாக ஏற்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு அவினாசி திட்டம். அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யல,
1990இல் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அதனை செயல்படுத்தக் கூடிய அளவுக்கு முயற்சி எடுத்தப்போது ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவுமே செய்யல, 1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இந்த திட்டத்தோட முதல் கட்டமா கோவைக்கு குடிநீர் வழங்க கூடிய திட்டத்தை செயல்படுத்தினார். அதன் பிறகு ஆட்சிக்கு அந்த அதிமுக அடுத்த கட்ட பணிகளை செய்யல.
2006ஆம் ஆண்டு அத்திக்கடவு திட்டத்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார். கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டுச்சு. மத்திய அரசுனுடைய ஒப்புதலுக்காக கடிதம் அனுப்ப பட்டுச்சு. உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வாங்கி கடன் தர முன் வந்துச்சு, ஆட்சி மாறியது. அடுத்து வந்த அதிமுக அந்த ஆட்சி எதுவுமே செய்யல. அத்தி கடவு குடிநீர் விநியோகத்தை முடக்கிட்டாங்க.
2012ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்துச்சு, ஆனாலும் அதிமுக அரசு எந்த முயற்சியும் செய்யல. நிலத்தை கையகப்படுத்த எந்த முயற்சியும் செய்யல. 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப் பட்டுச்சு. நீதிபதிகள் அதிமுக ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புங்க. அது சம்பந்தமாக திமுக கூட பல்வேறு போராட்டங்களை எல்லாம் நடந்துச்சு.
சட்டமன்றத்தில் நானே பலமுறை ஒத்திவைப்பு தீர்மானம் குடுத்துருக்கேன், பேசி இருக்கின்றேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திகடவு அவினாசி திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் அப்படின்னு சொன்னேன். இவ்வளவு நடந்த பிறகு வேற வழி இல்லாம இந்த ஆட்சி அறிவிச்சது. எனவே அத்திக்கடவு கனவை தான் நிறைவேற்றியதாக முதல்வர் இந்த வட்டாரத்த்தில் சொல்லி கொண்டு இருக்கிறாரே தவிர, அது உண்மை அல்ல.
இப்போ இவங்க அறிவிச்சு செயல்படுத்தி வர்றதும், அரை குறையான திட்டம்தான், முழுமையானது அல்ல. இப்ப சொல்றேன், கழக ஆட்சி மலர்ந்ததும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, முழு பலன் தரும் திட்டமாக விரிவுபடுத்தி நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.