தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தியா அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்றிலும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகள் ஹன்விகா பற்றி சிலவற்றை கூறியுள்ளார். அதில் எங்களுடைய வீட்டில் தேவதை நீ, எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ மட்டுமே காரணம் என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.