Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (23-02-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

23-02-2021, மாசி 11, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.31 வரை பின்பு புனர்பூசம்.

மரணயோகம் பகல் 12.31 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

ஏகாதசி விரதம்.

பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

நாளைய ராசிப்பலன் –  23.02.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

தனுசு

உங்களின் ராசிக்கு உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

Categories

Tech |