Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”.. பேரனுக்கு மீல் வாங்கி கொடுத்தது தப்பா…? நீதிமன்றத்திற்கு செல்லப்போகும் தாத்தா…!!

பிரிட்டனில் பேரனுடன் உணவகத்திற்கு சென்ற தாத்தா, கார் பார்க்கிங்கில் கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால் நீதிமன்றத்திற்கு செல்லயிருக்கிறார்.

பிரிட்டனிலுள்ள Luton என்ற நகரில் வசிக்கும் 75 வயதுடைய முதியவர் ஜான் பாப்பேஜ். இவர் தன் பேரன் Tylor உடன் அருகில் இருக்கும் Mc Donauld’s என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு யூரோக்கள் மதிப்புடைய ஹேப்பி மீல் ஒன்றை பேரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின்பு அவர் தன் காரை இலவச பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு காரிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

அதன்பின்னர் விளையாடிக்கொண்டிருந்த பேரன் வந்தவுடன் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இலவச பார்க்கிங் நேரத்தையும் தாண்டி அதிகமாக 17 நிமிடங்கள் தான் பார்க்கிங் செய்திருந்ததை அவர் கவனிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பல மாதங்கள் கடந்த நிலையில் DCBL என்ற கடன் வசூலிக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள் பாபேஜ் வீட்டிற்கு வந்து Highview பார்க்கிங்கில் இலவச நேரத்தை தாண்டி பார்க்கிங் செய்ததால் அபராததிற்குரிய ரசீதை வீட்டிற்கு அனுப்பினோம்.

நான்கு முறை அனுப்பியும் எந்த பதிலும் அளிக்காததால் தற்போது 1651 யூரோக்களுடன் 400 யூரோக்களும் சேர்த்து மொத்தமாக 2051 யூரோக்கள் பணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட பாபேஜ் மற்றும் அவரின் மனைவி libby ஆகிய இருவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் எங்கள் வீட்டிற்கு இதுபோன்ற எந்த ரசீதும் வரவில்லையே  என்றும் மறுத்துள்ளனர்.

அதாவது நான்கு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு தவறான வீட்டு முகவரிக்கு ஒவ்வொரு மாதமும் ரசீதுகள் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனினும் இது தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்திற்கு அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் Mc Donauld’s நிறுவனம் Highview பார்க்கிங் அதிகாரிகளிடம் தங்கள் வாடிக்கையாளரின் அபராதத்தை குறைக்குமாறு கேட்டுள்ளது.

Categories

Tech |