Categories
உலக செய்திகள்

“நீங்க என்ன செஞ்சாலும் நாங்க கைவிடவே மாட்டோம்”… மியான்மரில் வலுக்கும் சாமானிய மக்களின் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் ஆங்சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங்சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் பல பேர் உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.  இதனை மீறியும் ஆயிரக்கணக்கான மக்கள் மியான்மரில்  சில முக்கிய இடங்களில் உள்ள  வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டத்தை கைவிடுவதற்காக ராணுவதினர் தண்ணீரை பாய்ச்சியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வருகின்றனர்.

மேலும்  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டால்  இதுவரை 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . ராணுவத்தின் எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இன்றும் Naypitaw, Mandalay போன்ற முக்கிய நகரங்களில் பணிக்கு செல்லாமல் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது.

Categories

Tech |