Categories
சினிமா தமிழ் சினிமா

‘தனுஷ் எனக்கு கொடுத்தது வாய்ப்பு இல்ல வாழ்க்கை’… பிரபல காமெடி நடிகர் நெகிழ்ச்சி…!!!

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் ‘தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்’ எனக் கூறியுள்ளார் .

தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை தொடங்கிய இவர் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் .  இதன்பின் இவர் நடிகர் தனுஷின் ‘மாரி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது . இந்நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவகம் திறப்பு விழாவுக்கு நடிகர் ரோபோ சங்கர் சென்றுள்ளார் .

Image result for robo shankar and danush

அப்போது பேசிய ரோபோ சங்கர் ‘தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார் . கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தனுஷ் மிகப்பெரிய உதவி செய்தார் . ஒரு பிரச்சனையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரிடம்  உதவி கேட்டேன் . என் நிலைமையை புரிந்துகொண்ட தனுஷ் எனக்கு மிகப்பெரிய உதவி செய்தார் . இன்று என் குடும்பம்  மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமே தனுஷ் தான்’ என்று  கூறியுள்ளார்.

Categories

Tech |