மினி லாரியில் சாராயம் கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு மினி லாரி அதிவேகமாக வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் லாரி டியூப்பில் சாராயம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் வந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் பூபதி மற்றும் அவருடைய மகன் சுமன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சாராயத்தையும் மினி லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.