ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது வீடுகளில் விளக்கு ஏற்ற அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர், என் இல்லம், அம்மாவின் இல்லம் என்று நினைத்து வீடுகளில் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து அதிமுக தொண்டர்களும் தவறாது ஒற்றுமையுடன் மாலை விளக்கேற்றி அதிமுகவின் ஒற்றுமையை பறைசாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.