போன் டவர் கிடைக்கவில்லை என்று ராட்டினத்தின் உச்சியில் ஏறி அமைச்சர் போன் பேசியுள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அரசியல் குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ் என்பவர் போன் டவர் கிடைக்கவில்லை என 50 அடி உயரத்தில் உச்சியில் ராட்டினத்தில் அமர்ந்து போன் பேசியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? என்று அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.