Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவில் என்ன நடந்தது….? தூங்கியவர் இறந்தது எப்படி….? போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா சென்ற வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தினமணிநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுரையில் கேசவன் என்ற ஒரு நண்பர் உள்ளார். கேசவனுக்கு கொடைக்கானலில் மங்களம்கொம்பு பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் கேசவன், வினோத்குமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலின் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவில் கேசவன் வீட்டிற்கு அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காலையில் அனைவரும் எழுந்துள்ளனர். ஆனால் வினோத்குமார் மட்டும் நீண்ட நேரமாக படுத்திருந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் வினோத்குமாரை எழுப்பி பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு கேசவன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாண்டிக்குடி காவல்துறையினர் வினோத் குமாரின் உடலை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மரணம் குறித்து தாண்டிகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |