பிரிட்டனிலிருந்து பிரான்சிற்கு வரும் ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் நாளுக்குநாள் சில முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மற்றொரு நாட்டிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை முடிவுகள் அவசியம் என்று குறிப்பிட்ட சில நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் பிரிட்டனிலிருந்து சரியாக 48 மணி நேரத்திற்குள் பிரான்சிற்குள் வந்து விட்டால் PCR என்றழைக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவு அவசியம் இல்லை என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கனரக வாகன ஓட்டுனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது . இந்த திட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியிலிருந்து அமலுக்கு வந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் கட்டாயம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.