சுகாதாரத்துறை சார்பில் கோகூர் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் கோகூர் ஊராட்சி பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையிலான டாக்டர்கள் பிரபு, விக்னேஷ், கயல்விழி, முருகேஷ் குமார், ஜனனி, தீபிகா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை போன்றவைகள் பரிசோதிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த முகாமில் ஏரவாஞ்சேரி, வடகரை, கோவூர், ஆனைமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 693 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் ஊராட்சி உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார்.