தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பலனாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம். இருப்பினும் முகக் கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என கூறியுள்ளார்.