பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று மகள் மற்றும் ரமேஷ்கண்ணா என்ற மகனும் உள்ளனர். பிரியாவுக்கு 15 வயது ஆகிறது. அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ரமேஷ் கண்ணன் செட்டிமாங்குறிச்சி யில் ஒரு பேக்கரியில் வேலை பார்க்கிறார்.
கோபாலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார். அடிக்கடி சொல்லும் விஷயம் நான் மகளையும் மகனையும் கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்து விட்டேன் என்பது தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி கரும்பு வெட்டும் வேலைக்கு ஈரோடுக்கு சென்றுள்ளார். ரமேஷ் வேலை முடிந்து தாத்தா வீட்டில் தங்கியுள்ளார்.
கோபாலும் அவருடைய மகள் பிரியா மற்றும் வீட்டில் தனியாக இருந்தனர். கோபால் அதிகாலை 2 மணிக்கு எழுந்து எனது மகளை கொன்று விட்டேனே என்று அலறியபடி கழுத்தை அறுத்துக் கொண்டு அவரது தம்பி சுந்தர்ராஜ் வீட்டிற்கு ஓடினார். பதறிய குடும்பத்தினர் கோபால் வீட்டிற்கு ஓடி வந்து பார்த்தபோது பிரியா தலையில் சுத்தியலால் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். கோபாலும் மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்து இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரியா மற்றும் அவரது தந்தை கோபாலின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து பதறிப் போய் வந்த மணி மற்றும் அவரது மகன் ரமேஷ் கண்ணன் கணவர் மற்றும் மகளை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.