Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர் களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000 இல் இருந்து ரூ.6,250 ஆகவும், கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250 இல் இருந்து ரூ.5,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |