ஜவ்வரிசி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி, பச்சரிசி – அரை கப்
இட்லி அரிசி – அரை கப்
தக்காளி – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
பச்சைப் பட்டாணி – கால் கப்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசி, பச்சரிசி, இட்லி அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து மூழ்கும் வரை, தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
பின்பு மிக்சிஜாரில் ஊறவைத்த அரிசிகளை ஒன்றாக போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்ததும், மாவை 5 மணி நேரம் நன்கு புளிக்க வைத்து கொள்ளவும்.
பிறகு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்னர் கலந்து வைத்த மாவில், நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழையை போட்டு, அதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
அடுப்பில் தோசை தவாவை வைத்து காய்ந்ததும் அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்த மாவில் ஒவ்வொரு கரண்டியாக எடுத்து, தவாவில் தோசையாக ஊற்றி, மூடி வைத்து வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே தோசையாக எடுத்து சூடாக, தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் ருசியான ஜவ்வரிசி தோசை ரெடி.