மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட பெரிய தாக்குதலில் இராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் மாண்டலை நகரில்ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் பெரிய போராட்டம் ஏற்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, இணையதள தடை போன்ற தடைகள் எதுவும் பயனளிக்காமல் அனைத்தையும் மீறி ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மியான்மரின் யாங்கூன் ,மாண்டலே ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளில் இராணுவம் பெரிய அளவில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் இளம்பெண் ஒருவரின் தலையில் குண்டு பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்து இறந்தவரின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு பயங்கரமான போராட்டம் நடைபெற்று வருகிறது. மியான்மரில் போராட்டங்களுக்கு எதிராக ராணுவத்தின் ஒடுக்கு முறையை கண்டித்து ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டத்திற்கு முதலில் பேஸ்புக்கை தடை செய்த நிலையில் தற்போது ட்விட்டர், இன்ஸ்டாங்க்ராம் போன்ற சமூக வலைத்தளங்களையும் முடக்கியுள்ளது .
மேலும் ராணுவம் மக்கள் ஈடுபட்டு வரும் இந்தப் போராட்டத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க போவதோடு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.போராட்டடம் நடத்தப்படுபவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.