Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்…. ரோபோ ஷங்கர் புகழாரம்…!!

என் வாழ்க்கையில் தவித்துக் கொண்டிருந்த பொழுது உதவியவர் தனுஷ் என்று ரோபோ ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தனுஷின் ரசிகரின் ஒருவர் தனது உணவு திறப்பு விழாவிற்கு ரோபோ சங்கரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். அதனை ஏற்று விழாவில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் உணவகத்தை திறந்து வைத்துள்ளார். பின்னர் அவர் பேசுகையில், “தென்னிந்தியாவில் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தனுஷ் என்றும் அவர் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கொரோனா காலக்கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் ஒன்றை எப்படி சரி செய்வது? என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது தனுஷ் தனக்குப் பேருதவி செய்ததாகவும் அவரை புகழ்ந்து பேசினார். அதனை தொடர்ந்து தான் இப்பொழுது நிம்மதியாக வாழ்வதற்கு பல இயக்குனர்கள் ஆரம்பப்  புள்ளியை வைத்து இருந்தாலும் தன் வாழ்க்கையை உயர்த்தியவர்  தனுஷ்தான் என்றும் தனுஷை பாராட்டினார்.

Categories

Tech |