Categories
மாநில செய்திகள்

மக்களே! கொஞ்சம் யோசிங்க…. வெறும் 27 பைசாவுக்காக…. உங்க ஓட்டை விற்கப்போறீங்களா…??

தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான மும்முரமாக வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஓட்டிற்கு மக்களுக்கு பணம் கொடுக்க வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டுவருவதை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை ஈடுபட காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வாசகத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ500 . ஐந்து வருடத்திற்கு 1,825 நாட்கள். அதில் இருந்து 500-ஐ 1825 இ இருந்து வகுத்தால் வெறும் 27 பைசா தான் வரும். இந்த 27 பைசாவுக்காக ஆக உங்களுடைய ஓட்டை விற்கப் போகிறீர்களா? என எழுதி உள்ளது.

Categories

Tech |