அ.ம.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன். இவரை பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தி.மு.க பிரமுகர் உட்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து வானவராயனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா, தாமஸ் மற்றும் அம்ரிஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.