Categories
உலக செய்திகள்

முத்தமிடுவது போல…. பெண் செய்த அதிர்ச்சி செயல்…. எடுத்து விழுங்கிய பறவை…!!

இளம்பெண் ஒருவர் வாக்குவாதத்தில் நபரை முத்தமிடுவது நாக்கை கடித்து துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்ற பகுதியில் அறிமுகமில்லாத ஆணுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஜேம்ஸ் என்ற அந்த ஆண் பெத்தானே ரியான் என்ற அந்த பெண்ணின் முகத்தில் அடிப்பது போல் கையால் செய்கை காட்டியுள்ளர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் சட்டென்று ஜேம்ஸை இழுத்து முத்தமிட்டுள்ளார். இதனை சற்றும்  எதிர்பாராத ஜேம்ஸ் திகைத்து நிற்கும் நேரத்தில் அவரின் நாக்கை கடித்து துப்பிவிட்டார் அந்த பெண். இச்செயலை  கண்ட அங்கிருந்து சீகள் என்ற பறவை நாக்கின் துண்டை எடுத்து விழுங்கிவிட்டது.

இதனையடுத்து நாக்கில் ரத்தம் கொட்டும் நிலையில் மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டார் ஜேம்ஸ். எனினும் நாக்கின் துண்டு கிடைக்காததால் மருத்துவர்களால் ஜேம்ஸின் நாக்கை சரி செய்ய முடியவில்லை. அவர் இனி தன் வாழ்நாள் முழுவதும் பாதி நாக்கு இல்லாமல் தன் வாழ்க்கையை  நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தப் பெண்ணின்  மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |