சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது. “விஷன் 2030” என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருகிறது.
சவுதியில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் கோரிக்கை பிறகு அந்த கட்டுப்பாடு கடந்த 2018 நீக்கப்பட்டது. இதேபோன்று பெண்கள் கால்பந்து போட்டியை பார்க்க இருந்த தடையும் நீக்கப்பட்டது. மேலும் செய்திவாசிப்பாளர் போன்ற பலப் பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வகையில் சவுதியில் தற்போது மற்றொரு கட்டுப்பாடு உடைக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், தற்போது பெண்கள் ராணுவத்திலும் சேரலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி, சவுதி பெண்கள் சவுதி அரேபிய ராணுவம், ராயல் சவுதி வான் பாதுகாப்பு, சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப் படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்றும் கல்ஃப் நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.