உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில், பின்னல் ஆடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலை சிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதுக்கு இவங்க தானே காரணம். மத்திய அரசோட தவறான பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி, ஏற்றுமதி – இறக்குமதி விதிமுறைகளால் சிறு குறு தொழில்கள் முடங்கி போச்சு.பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்துல அழைத்து பேசினாரா ? முதலமைச்சர். அப்படி அவருக்கு ஒரு யோசனை ஏன் வரல ? அப்படி யோசனை வராது. ஏன்னா அவரு இதயத்துல…. மக்களுக்கு இடம் இல்லை.
இத்தகைய முதல்வருக்கு மக்கள் மனதில் இடம் இல்லை என்பதை உணர்த்தும் தேர்தல் தான் இந்த தேர்தல். அவரை வீட்டுக்கு அனுப்பிய பிறகு கோட்டைகள் சென்று ஆட்சி அமைக்கும் திமுக. உங்கள் கவலைகள் அனைத்தையும் தீர்க்கும் இது உறுதி. அது மட்டுமல்ல திருப்பூரிலிருந்து தொழில் முணைவோருக்கு ஸ்டாலின் ஒரு உறுதி அளிக்கிறேன்… தொழில் வளர்ச்சிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்சிக்கும் கழக அரசில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
செயல் திட்டமும் உங்கள் பங்கேற்புடன் வகுக்கப்படும் என உத்திரவாதம் தருகிறேன். கழக ஆட்சி மக்களுடைய பொற்கால ஆட்சியாக அமையும். தலைவர் கலைஞர் அவர்கள் என்னென்ன நினைச்சாரோ, என்னென்ன சிந்திச்சாரோ ? என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தாரோ ? அவர் மறைக்கிற நேரத்துலகூட கழக கழகம் என்பது மட்டுமல்ல….
தமிழ்நாட்டு மக்கள்… தமிழ்நாட்டு மக்கள் என்ற உணர்வோடு தான் அவர் கடைசி வரையில் இருந்திருக்கிறார், உழைத்திருக்கிறார், பாடுபட்டு இருக்கிறார், பணியாற்றியிருக்கிறார். அவரே சொல்லியிருக்கிறார்… என்ன அடிக்கடி என் பெயரை சொல்லி… ஸ்டாலினிடத்தில் எனக்கு பிடிச்சது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பலமுறை குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்.
உழைப்பின் உடைய பிதாமகனாக விளங்கியவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர். அவர் அழைத்திருக்க கூடிய என்னை… எந்த நம்பிக்கையோடு சொன்னாரோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து, அவர் வழி நின்று… என்னுடைய கடமைய நான் உறுதியாக நிறைவேற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன் என தெரிவித்தார்.